விவசாயிகளின் தற்காலப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக் கோரி – வடக்கு, கிழக்கில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம்!!

விவசாயிகளின் தற்காலப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக் கோரி வடக்கு கிழக்கில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வலி. கிழக்கு விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் புத்தூர் மற்றும் உரும்பிராய் கம நல சேவை நிலையங்கள் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் இன்று முற்பகல் 9.15 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பங்கேற்றுள்ளார்.

வெங்காய இறக்குமதியை முற்றாகத் தடை செய், விவசாயிகளுக்கான உரம், கிருமிநாசிகளை போதியளவு கிடைக்க வழி செய், உருளைக்கிழங்கு அறுவடை காலத்தில் உருளைக்கிழங்கு இறக்குமதியை தடை செய் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

விவசாயிகளின் தற்காலப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக் கோரி வடக்கு – கிழக்கில் உள்ள கம நல சேவை நிலையங்கள் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மூளாயில் உள்ள கமநல சேவை நிலையத்திற்கு முன்னாலும் விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்கள் “உரத்தை தடுத்து விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே, விவசாயிகளே நாட்டின் முள்ளந்தண்டு என்று கூறிவிட்டு விவசாயிகளின் முள்ளந்தண்டினை முறிக்காதே, உர என்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் வலி. மேற்கு பிரதேச சபையின் உப தவிசாளர், வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

அதேபோன்று சாவகச்சேரியிலும் விவசாயிகளும் பொது மக்களும் கிளர்ந்து எழுந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது அரசின் முடிவுகளுக்கு எதிராக விவசாயிகள் கோசங்களை எழுப்பியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *