எரிவாயு பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு – லாஃப்ஸ் நிறுவனம்
எரிவாயு பற்றாக்குறைக்கு எதிர்வரும் சில தினங்களுக்குள் தீர்வு வழங்கப்படும் என லாஃப்ஸ் நிறுவனத்தின் தலைவர் W.K.H.வேகபிட்டிய தெரிவித்துள்ளார். நேற்றைய தினத்தில்(25) 2 எரிவாயு கப்பல்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்ததாக அவர் கூறினார். அதற்கமைய, இன்று(26) முதல் குறித்த எரிவாயு தொகை சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக லாஃப்ஸ் எரிவாயுவிற்கு சந்தையில் தட்டுப்பாடு நிலவுகின்றது. கப்பல்களுக்கு எரிவாயுவை ஏற்றும் சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.