கனவை நிறைவேற்ற முயற்சிக்கும் நாகார்ஜுனா

தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் நாகார்ஜுனா, தனது கனவை நிறைவேற்ற தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் நாகார்ஜுனா தமிழில் ரட்சகன் படத்தில் நடித்துள்ளார். நாகார்ஜுனாவுக்கு ஐதராபாத்தில் ஸ்டூடியோ உள்ளது. அடுத்து சினிமா அருங்காட்சியகம் தொடங்க திட்டமிட்டு உள்ளார்.

இதுகுறித்து நாகார்ஜுனா கூறும்போது, “திரைப்படங்களை எதிர்கால சந்ததியினருக்கும் கொண்டு செல்ல வேண்டும். எனவே தெலுங்கு சினிமாவுக்காக ஒரு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்பது எனது கனவாக இருக்கிறது.
2019-ல் திரைப்பட பயிற்சி கருத்தரங்கு ஒன்றை நடத்தியபோது சினிமாவில் உள்ள தொழில்நுட்பங்களை பார்த்து வியந்தேன். அப்போதே தெலுங்கு திரைப்பட துறையில் உள்ள அம்சங்கள் அனைத்தையும் சேகரித்து அருங்காட்சியகம் அமைக்கும் எண்ணம் தோன்றியது. இதனை செயல்படுத்த நாடு முழுவதும் உள்ள திரைப்பட சாதனையாளர்களுடன் ஆலோசித்து வருகிறேன்.
துரதிர்ஷ்டவசமாக கொரோனா தொற்று எனது திட்டத்தை தாமதப்படுத்தி உள்ளது. அருங்காட்சியகத்துக்கான பொருட்களை சேகரிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. நூலகங்கள் போல திரைப்படங்களும் பாதுகாக்கப்பட வேண்டியவை” என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *