மகாராணி இரண்டாம் எலிசபெத் மரணத்தால்….. அரியணையில் மாற்றம் – எழுந்துள்ள பாரிய சிக்கல்!!

பால்மோராவில் உடல்நிலை மோசமானதை அடுத்து

சிகிச்சை பெற்று வந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது 96 ஆவது வயதில் நேற்று(08/09/2022) காலமானார்.

வியாழனன்று ராணியின் உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து அவரது குடும்பத்தினர் அவரது ஸ்கொட்டிஷ் தோட்டத்தில் கூடினர்.

 

ராணியின் மரணத்துடன், அவரது மூத்த மகன் சார்லஸ்(முன்னாள் வேல்ஸ் இளவரசர்) அவர்கள்

 புதிய அரசராகவும், 14 கொமன்வெல்த் நாடுகளுக்கு தலைவராகவும் நாட்டை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இன்று பிற்பகல் பால்மோரலில் ராணி நிம்மதியாக உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியர்கள் ராணியை மருத்துவக் கண்காணிப்பில் வைத்த பிறகு,

ராணியின் குழந்தைகள் அனைவரும் அபெர்டீனுக்கு அருகிலுள்ள பால்மோரலுக்குப் பயணம் செய்தனர்.

ராணியின் பேரனான  இளவரசர் வில்லியம், அவரது சகோதரர் இளவரசர் ஹரியுடன் அங்கு செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் உடல்நிலை மோசமானதையடுத்து

அவர் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதான செய்தி அறிவிக்கப்பட்டுள்ளதால் பிரித்தானியாவில் இனம்புரியாத சோகம் ஏற்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் அரசியல் மற்றும் மதத்தலைவர்கள் தமது பிரார்த்தனை செய்திகளை வெளியிட்டுவந்த நிலையில்

ராணியின் பிள்ளைகள், பேரக்குழந்தைகள் மற்றும் பூட்டப்பிள்ளைகள் யாவரும் ராணி தங்கியுள்ள பல்மோரல் கோட்டைக்கு அவசரமாகச் சென்றனர்.

நேற்று முன்தினம்(07/09/2022) முதல் உடல்நிலையில் பாதிப்பை சந்தித்த ராணியின் உடல் நிலை நேற்று(08/09/2022)பரிசோதனை செய்யப்பட்டபோது உடல்நிலை குறித்து கவலை கொண்ட மருத்துவர்கள்,

அவரை தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

96 வயதான ராணி,

நேற்று முன்தினம் காணொளி வாயிலாக இடம்பெற்ற கூட்டத்தில் இருந்து வெளியேறியபின்னர் அவரது உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

பக்கிங்காம் அரண்மனையில் இடம்பெறும் பாதுகாவலர்களின் அணிவகுப்பு மீளெடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் முன்னாள் குடியேற்ற நாடுகளான பொதுநலவாய நாடுகளிலும் இந்த செய்தி உற்றுநோக்கலுக்கு உள்ளாகியுள்ளது.

இதற்கிடையே,

பிபிசி(BBC) உட்பட்ட ஊடகங்கள் அனைத்தும் இந்த செய்தியை மையப்படுத்திய தமது சிறப்பு நேரலை நிகழ்சிகளை நடத்திவந்தனர்.

பிபிசி(BBC) தொலைகாட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளாகள் மற்றும் செய்தி வாசிப்பாளர்கள் அனைவரும் கறுத்த உடைகளில் தோன்றினர்.

அதன்பின்னர்,

சிறிது நேரத்தில் பிரித்தானிய மகாராணி உயிரிழந்துவிட்டதாக பக்கிம்காம் அரண்மனை உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

 

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணத்தையடுத்து,

அவரது புதல்வரான மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணைக்கு வந்திருப்பதால் பிரித்தானியாவின் வணிக மற்றும் பொருளாதார தளத்திலும் மாற்றங்கள் ஏற்படவுள்ளன.

ராணியின் மறைவை அடுத்து புதிய மன்னர் ஆட்சிக்கு வந்திருப்பதால்

ராணியின் முகத்துடன் பிரித்தானியாவில் புழக்கத்தில் உள்ள

80 பில்லியன் பவுண்ஸ் பெறுமதியில் இருக்கும் 4.5 பில்லியன் ஸ்டெர்லிங் பவுண்ஸ்

நாணயத்தாள்கள் மற்றும் உலோக நாணயங்கள் மாற்றப்படவேண்டும்.

பழைய நாணயத்தாள்கள் மீளெடுக்கபட்டு புதிய மன்னரின் முகம் பதிக்கப்பட்ட நாணயங்கள் புழக்கத்தில் விடவேண்டும்.

ஆனால்,

இந்த மாற்றத்துக்கு குறைந்தது இரண்டு ஆண்டுகாலம் எடுக்கும் எனக் கூறப்படுகிறது.

அந்தவகையில்,

கடந்த வருடம் புழக்கத்துக்கு வந்த புதிய 50 ஸ்டெர்லிங் பவுண்ஸ் நாணயதாள்களும் மாற்றப்படவேண்டும்.

பிரித்தானியாவில் மட்டுமல்ல கனடாவில் உள்ள சில 20 ஸ்டெர்லிங் பவுண்ஸ் நாணயத்தாள்களும் ,

நியூசிலாந்தில் உள்ள நாணயங்களிலும்,

கிழக்கு கரீபியனில் புழக்கத்தில் உள்ள நாணயங்களும் மாற்றப்படவேண்டும்.

இதேபோல,

பிரித்தானியாவில் ராணியின் உருவத்துடன் புழக்கத்தில் உள்ள அஞ்சல் தலைகளும் மாற்றப்படவேண்டும்.

இதனைவிட,

கடவுச்சீட்டுகளில் உள்ள ராணியை மையப்படுத்திய வார்த்தைகளும் மாற்றப்படவேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *