தினமும் சுமார் 200 மீன்கள் இறந்து கரையொதுங்கும்…. குருநாகல் ஏரிக்கரை!!
குருநாகல் ஏரிக்கரையில் கடந்த ஒரு வார காலமாக உயிரிழந்த நிலையில் நூற்றுக்கணக்கான மீன்கள் கரை ஒதுங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
தினமும் சுமார் 200 மீன்கள் இறக்கின்றதாகவும், சிலர் இறந்த மீன்களை சேகரித்து சந்தைகளில் விற்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
சாதாரணமாக இறந்த மீன்களை 2-3 கூடைகளில் சேகரிக்கலாம், மேலும் இறந்த மீன்கள் அனைத்தும் ஒரே மாதிரியானவை என்றும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை,
இவ்வாறு இறந்த மீன்கள் குருநாகல் நகராட்சி மன்ற ஊழியர்களால் தினசரி சேகரிக்கப்படுகின்றன.
ஏரியில் உள்ள மீன்களின் அடர்த்தி மற்றும் ஏரிக்குள் உள்ள பாசிகள் காரணமாக மீன் இறப்புகள் அதிகரித்து வருவதாக ஆய்வக அறிக்கைகள் கண்டறிந்துள்ளதாக குருநாகல் மேயர் துஷார சஞ்சீவ கூறினார்.
இருப்பினும், குருநாகல் குடியிருப்பாளர்கள் தண்ணீரைப் பயன்படுத்துவதில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை.
ஏனெனில் தற்போது ஏரியில் இருந்து குடிமக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுவதில்லை என்றும் குறிப்பிட்டார்.