தீவிரமடையும் டெல்டா!! சனிக்கிழமை வருகிறது இறுதி அறிக்கை!!
கொரோனா தொற்றின் திரிபடைந்த டெல்டா தொற்று தீவிரமடைந்திருப்பதாக கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான சந்திம ஜீவந்தர தெரிவிக்கின்றார்.
டெல்டா தொற்றினை அடையாளம் காண்பதற்கான ஆய்வுகளும் மும்முரமாக இடம்பெற்று வருவதாக ஊடகங்களுக்கு நேற்றைய தினம் கருத்து வெளியிட்டபோது அவர் கூறியுள்ளார்.
இதுவரை கிடைத்த மாறுபட்ட கொரோனா தொற்றின் மாதிரிகள் தற்சமயம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில், எதிர்வரும் சனிக்கிழமை இறுதியறிக்கையை வெளியிட எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.