எதிர்வம் டிசம்பர் இல் பொது மக்களின் பார்வைக்காக திறக்கப்படவுள்ள கொழும்பு துறைமுக நகரம்!!
எதிர்வம் டிசம்பர் மாதம் கொழும்பு துறைமுக நகரத்தை பொது மக்களின் பார்வைக்காக திறப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மாத்திரமல்லாது உலக பொருளாதாரத்தில் போட்டியிடும் நோக்கில் உருவாக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரம், கடலை நிரப்பி செயற்கையாக உருவாக்கப்பட்ட 269 ஹெக்டேயர் நிலப்பரப்பை கொண்ட பிரதேசமாகும்.
இதில்,
தெற்காசியாவில் இந்து சமுத்திர பிராந்தியத்தில் அமைந்துள்ள துறைமுக நகரில் கவர்ச்சிகரமான வீடுகள் மற்றும் வர்த்தக மையங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன. சைனா ஹாபர் இஞ்சினியரிங் கம்பனி இந்த துறைமுக நகரத்தை உருவாக்கியுள்ளது.
நகரின் 99 வீதமான முதற்கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக துறைமுக நகர இணையத்தளம் தெரிவித்துள்ளது. இந்நிலையிலேயே பொது மக்களின் பார்வைக்காக நகரம் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.