தடுப்பூசியை தொடர்ந்து சீனாவிலிருந்து வருகிறது ஒக்ஸிஜன்!!
கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சீனாவில் இருந்து ஒக்ஸிஜனை இறக்குமதி செய்ய மருந்து ஒழுங்குமுறை மற்றும் வழங்கல் இராஜாங்க அமைச்சு தயாராகி வருகிறது.
கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தினசரி தேவைப்படும் ஒக்ஸிஜனின் அளவு 45000 லீட்டரை தாண்டியுள்ளதால், சீனாவில் இருந்து ஒக்ஸிஜனை பாதுகாப்பான கையிருப்பாக பெற அமைச்சு முடிவு செய்துள்ளது.
இந்த வகையில் 120,000 லீட்டர் ஒக்ஸிஜன் இறக்குமதி செய்யப்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது. கொவிட் தொற்றுநோயின் தொடக்கத்தில், தினமும் 21,000 லீட்டர் ஒக்சிஜன் மட்டுமே தேவைப்பட்டது. மூன்றாவது அலையில் அந்த எண்ணிக்கை இரட்டிப்பாகியது.
இதற்கிடையில், பல்லேகலேயை தளமாகக் கொண்ட தனியார் நிறுவனமொன்று 1.5 மில்லியன் ஒக்சிஜன் சிலிண்டர்களை தயாரித்து சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது.