77 ஓட்டங்களில் டெல்லியை வீழ்த்தியது சென்னை….. சூடு பிடித்தது ஆட்டக்களம்!!

IPL தொடரின் இன்று(20/05/2023) இடம்பெறும் 67 ஆவது போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதின.

டெல்லியில் இடம்பெற்ற குறித்த போட்டியில் சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இதற்கமைய,

சென்னையணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான கன்வே ருத்ராஜ் ஜோடி அதிரடியான ஆரம்பத்தை அணிக்கு பெற்றுக்கொடுத்தது.

ருத்ராஜ் 79 ஓட்டங்களுடனும் கன்வே 86 ஓட்டங்களுடனும் வெளியேற சென்னையணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் நிறைவில் 3 விக்கட் இழப்பிற்கு 223 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்த போட்டியில்,

சென்னை அணி வெற்றிபெற்றால் நேரடியாக PLAYOFF சுற்றுக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று(20/05/2023) நடைபெற்ற 67ஆவது IPL ஆட்டத்தில் டெல்லி அணியுடனான வெற்றியின் மூலம் சென்னை அணி playoff சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர் நிறைவில் 223 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

குறித்த இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 9 விக்கட் இழப்புக்கு 146 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 77 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *