இன்று மாலை 5மணி வரைக்குமே டீசல் மற்றும் உலை எண்ணெய் ஆகியவற்றின் கையிருப்பு உள்ளன!!!!
இலங்கை மின்சார சபையில் இன்று மாலை 5மணி வரைக்குமே டீசல் மற்றும் உலை எண்ணெய் ஆகியவற்றின் கையிருப்பு, இருப்பதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க செயலாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
முழு நாடும் நாளைய தினம் இருளில் மூழ்கும் என்று மின்சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தமை தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,
நாளைய தினத்திற்கான மின்சார உற்பத்திக்காக 2000 மெற்றின்தொன் டீசல் மற்றும் உலை எண்ணெய் என்பன தேவைப்படுகிறது.
ஏற்கனவே,
நாம் இந்த விடயங்களை கூறியபோது, அமைச்சர் கம்மன்பில, அதனை நிராகரித்து வந்தார்.
எனினும்,
தற்போது அவரே இந்த தகவலை வெளியிட்டுள்ளார் என்றும் ஆனந்த பாலித குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையிலும்,
ஏற்பட்டிருக்கும் நிலைமையை சமாளித்து இன்று மாலையில் மின்சாரம் தடைப்படாமல் விநியோகிக்கப்படும் என்று மின்சாரசபையின் மேலதிக பொது முகாமையாளர் அன்றூ நவமணி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.