TOP STORIES

CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

ஷாலினி அஜித் குமார் வெளியிட்ட வைரல் பதிவு!!

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் “விடா முயற்சி” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படபிடிப்பு அஜர்பைஜானில் நடந்தது. படப்பிடிப்பு முடிவடைந்து அவர் சென்னை திரும்பினார். அஜித் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முன் முழு உடல் பரிசோதனை செய்வது வழக்கம். அந்த வகையில், கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மார்ச் 8 ஆம் தேதி சிகிச்சை முடித்து வீடு திரும்பினார் அஜித். அடுத்தநாள் அவர் மகன் ஆத்விக்கின் பள்ளி கூடத்தில் கால்பந்து விளையாடுவதை பார்க்க வந்து இருந்தார். அவர் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

2500 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள்….. கல்வியமைச்சு அதிரடி அறிவிப்பு!!

மேல் மாகாணத்தில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களைப் பூர்த்தி செய்யும் விதமாக 2500 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக மேல் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சிறிசோம லொக்குவிதான தெரிவித்துள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற ஆசிரியர் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இந்தக் குழு ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, இங்கு ஆரம்பக்கல்வி, கலை, வர்த்தகம், விஞ்ஞானம் மற்றும் கணிதம் ஆகிய பாடப்பிரிவுகள் மற்றும் பொதுக் கல்விப் பாடங்களை கற்பிப்பதற்காக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருவதாக செயலாளர் தெரிவித்துள்ளார். Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

சஹரானின் அடிப்படைவாதத்தை மீள் உருவாக்கும் முயற்சி….. அதிரடி சுற்றிவளைபிபில் 30 இளைஞர்கள் கைது!!

இலங்கையில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் தொடர்ச்சியாக சஹரானின் அடிப்படைவாதத்தை மீள் உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டதாக கூறி சந்தேகத்தின் பேரில் 30 இளைஞர்களை காத்தான்குடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காத்தான்குடி பகுதியில் இன்று(01/03/2024) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் காத்தான்குடியில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடி கூட்டமொன்றை நடத்தியுள்ளனர். இந்நிலையில், குறித்த கூட்டத்தின் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

SLTB பேருந்து மோதி வணக்கம் 18 வயது உயர்தர பிரிவு மாணவன் மரணம் – சிதறிய துவிச்சக்கரவண்டி….. யாழில் சம்பவம்!!

யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் காவல்துறை பிரிவிற்குட்பட்ட மீசாலை ஐயா கடை சந்திப் பகுதியில் இன்று (01/02/2024) காலை 6 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் உயர்தர விஞ்ஞானப் பிரிவு மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மீசாலை கிழக்கைச் சேர்ந்த 18 வயதான சிவநாவலன் பரணிதரன் என்ற மாணவனே பரிதாபமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இ.போ.ச பேருந்து பாடசாலையில் விளையாட்டுப் பயிற்சியை முடித்து விட்டு துவிச்சக்கரவண்டியில் வீடு திரும்பிய மாணவனை மோதியதில் மாணவன் படுகாயமடைந்த Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

காணாமல் போன இளவரசி….. இங்கிலாந்தில் புதிய பரபரப்பு!!

வேல்ஸ் இளவரசி கேத் மிடில்டனை(Kate Middleton, Princess of Wales) காணவில்லை என இங்கிலாந்தில் புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது. இதனால் அரச குடும்பத்தில் புதிய பிரச்சினை எழுந்துள்ளது. வில்லியம் – கேத் மிடில்டன் தம்பதி கடந்த இருவாரங்களாக புதிய சர்ச்சைகளை எதிர்கொண்டு வருகிறது. சர்ச்சைகளின் உச்சமாக இளவரசி கேத் மிடில்டனை(Kate Middleton) காணவில்லை என இங்கிலாந்தில் புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது. ஜனவரி மாதம் முதல் இளவரசி கேத் மிடில்டன்(Kate Middleton) உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து, மத்திய Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

பாடசாலை மாணவர்களுடன் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து….. ஆபத்தான நிலையில் 36 மாணவர்கள்!!

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று சியம்பலாண்டுவ பிரதேசத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தானது இன்று(29/02/2024) இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 36 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். புத்தம பகுதியில் இருந்து மொனராகலை நோக்கி இன்று(29/02/2024) காலை பாடசாலை மாணவர்களுடன் பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. மேலும், குறித்த விபத்தில் காயமடைந்த 36 பாடசாலை மாணவர்களும் சியம்பலாண்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

தனியார் பேருந்துகளால் முற்றாக முடக்கப்பட்டது யாழ்ப்பாணம்….. அவதியில் பயணிகள், மாணவர்கள்!!

 யாழ்ப்பாணத்தில் இன்றையதினம்(29/02/2024) உள்ளூர் மற்றும் நெடுந்தூர தனியார் பேருந்து சேவைகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. அத்தோடு, யாழ்ப்பாணத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு சேவையில் ஈடுபடும் பேருந்துகள், அத்தோடு வெளி மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. நேற்றையதினம்(28/02/2024) யாழ்ப்பாணத்தில் உள்ளூர் தனியார் பேருந்து சேவைகள் சேவையை முன்னெடுத்த நிலையில் நெடுந்தூர பேருந்து சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டிருந்தன. ஆனால், இன்றையதினம்(29/02/2024) உள்ளூர் மற்றும் நெடுந்தூர பேருந்து சேவைகள் அனைத்தும் முற்றாக Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

முடிவெடுக்க முடியாமல் நீழும் பொ.ப.ஆணைக்குழு உறுப்பினர்களின்….. மின்கட்டண குறைப்பு தொடர்பான கலந்துரையாடல்!!

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றினை நடத்தியுள்ளனர். குறித்த கலந்துரையாடலானது இன்று(28/02/2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. எவ்வாறாயினும், கலந்துரையாடலின் பின்னர் இன்று(28/02/2024) இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் கூடி தீர்மானம் எடுக்கவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு உறுப்பினர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Read More
EntertainmentFEATUREDindiaLatestNewsTechnologyTOP STORIESWorld

Captain ஆக விண்வெளிக்கு செல்லும் தமிழர்….. இஸ்ரோ சார்பாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார் பிரதமர் மோடி!!

விண்வெளிக்கு செல்லும் நான்குபேரை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்த நான்கு பேரில் தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழர் ஒருவரும் இடம்பிடித்துள்ளார். இதன்படி , Group Captain அஜித் கிருஷ்ணன் என்ற தமிழரே விண்வெளிக்கு செல்லவுள்ளார். ஏனையவர்களாக Group Captain பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், Group Captain அங்கத் பிரதாப், Wing Commander சுபான்ஷு சுக்லா ஆகியோர் அடங்குகின்றனர். Group Captain அஜித் கிருஷ்ணன் ஏப்ரல் 19, 1982ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். உதகையில் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

யாழிலிருந்தும், யாழிற்கும் தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறாது….. வட இலங்கை த.பே.உ.சங்க தலைவர்!!

யாழ்ப்பாணத்தில் உள்ளூர் தனியார் பேருந்து சேவைகள் வழமைபோன்று சேவையை முன்னெடுத்து வருகின்ற நிலையில் நெடுந்தூர பேருந்து சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன. முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாததால் இன்றுமுதல் தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தலைவர் சி.சிவபரன் நேற்று(27/02/2023) ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார். இதனால், யாழ்ப்பாணத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு சேவையில் ஈடுபடும் பேரூந்துகள், அத்தோடு வெளி மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் தமது Read More

Read More