TOP STORIES

FEATUREDLatestNewsTOP STORIES

கதவுகள் பூட்டப்பட்ட புகையிரதத்தில் சமையல் பிரிவில் எரிவாயு விபத்து….. பேர் உடல்கருகி பலி!!

இந்தியாவின் மதுரை புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த IRCDC சுற்றுலா புகையிரதத்தில் சமையல் பிரிவில் எரிவாயு வெடித்து தீப்பற்றியுள்ளது. இன்று(26/08/2023) அதிகாலை 5.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு தீயணைப்பு படையினர் விரைவில் வந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். புகையிரத பெட்டியில் 60 பேர் இருந்ததாகவும் கதவுகள் பூட்டப்பட்டிருந்ததால் யாரும் வெளியே செல்ல முடியாமல் தீயில் சிக்கியதாகவும் குறிப்பிடப்படுகிறது. அத்துடன், குறித்த விபத்தில் 10 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. .

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

கோழி இறைச்சி பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

இலங்கையில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாவினால் குறைக்க விவசாய அமைச்சு இணக்கம் வெளியிட்டுள்ளது. விவசாய அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இவ்வாறு விலையை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக தொழிற்துறையினர் தெரிவித்துள்ளனர். அ‌த்துட‌ன், டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி அதிகரிக்கும் பட்சத்தில் வாடிக்கையாளர்களுக்கும் அதே அனுகூலத்தை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட தொழில் அதிபர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். மேலும், இலங்கையில் கோழி இறைச்சியின் வருடாந்த தனிநபர் நுகர்வு 11 கிலோவாகவும், முட்டையின் வருடாந்த தனிநபர் நுகர்வு Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

காவல்துறை காவலில் இருந்த ராஜன் ராஜகுமாரியின் மரணம்….. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

வெலிக்கடையில் காவல்துறை காவலில் வைத்து உயிரிழந்ததாக கூறப்படும் ராஜன் ராஜகுமாரியின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (25/08/2023) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுலுவல இந்த உத்தபிறப்பித்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையின் தீர்ப்பை வழங்கும் போதே மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

உயர்தர பரீட்சைகள் தொடர்பில் பரீட்சைகள் தொடர்பில் முக்கிய அறிவித்தல்!!

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிர்வரும் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு அனுமதியளித்துள்ளது. இந்த அறிவித்தலை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மதிப்பீட்டு நடவடிக்கைகளின் முதல் பகுதி கடந்த 18ஆம் திகதி ஆரம்பமானதுடன் எதிர்வரும் 27ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

மோட்டார் சைக்கிள் – கனரக வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து – உயிரிழந்த 14 வயது சிறுவன்….. வடமராட்சி கொற்றாவத்தையில் சம்பவம்!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கொற்றாவத்தை பகுதியில் கனரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதுண்ட விபத்தில் 14 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதோடு இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று (24/08/2023) மதியம் கரணவாய் வடமேற்கு கொற்றாவத்தை கணபதி மில்லுக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கொற்றாவத்தை பகுதியைச் சேர்ந்த சாகித்தியன் (14 வயது) எனும் சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு பகுதியிலிருந்து கடந்த சில வருடங்களாக கொற்றாவத்தை Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

நீர்கொழும்பில் தீப்பற்றி எரிந்தது….. யாழிலிருந்து கட்டுநாயக்கா வந்த சொகுசு பேருந்து!!

யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பேருந்து நீர்கொழும்பில் தீப்பற்றி /எரிந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று (24/08/2023) அதிகாலை 4:30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வெளிநாடு செல்வதற்காக 35 பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பேருந்து ஒன்றே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது. நேற்றைய தினம் (23/08/2023) இரவு எட்டு மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்ட பேருந்து இன்று(24/08/2023) அதிகாலை 4.30 மணி அளவில் நீர்கொழும்பு தளுவகொட்டுவ பிரதேசத்தில் திடீரென தீப்பற்றி கொண்டது. Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

கனடாவில் போலியாக தயாரிக்கப்பட்ட நிரந்தர வதிவிட அட்டைகள்….. அதிரடி கைதுகள்!!

கனடாவில் போலியாக தயாரிக்கப்பட்ட நிரந்தர வதிவிட அட்டைகள் வைத்திருந்த இருவரை எல்லை பாதுகாப்பு முகவர் நிறுவனம் கைது செய்துள்ளது. போலியாக தயாரிக்கப்பட்ட கனடிய நிரந்தர வதிவிட அட்டைகளுடன் குறித்த நபர்களிடம் சமூக காப்புறுதி அட்டைகளும் மீட்கப்பட்டுள்ளன. ஆம்ஸ்ட்ராங் துறைமுக நுழைவாயிலில் இந்த இருவரையும் எல்லை பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். இந்த சந்தேக நபர்களிடமிருந்து பல்வேறு போலி ஆவணங்களும் 10000 டொலர்கள் பணமும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்கள் நிதிச் சலவையில் ஈடுபட்டனரா அல்லது பயங்கரவாத நிதியீட்டுடன் Read More

Read More
EntertainmentFEATUREDindiaLatestNewsTechnologyTOP STORIESWorld

வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது சந்திராயன் 3 விண்கலம்….. நிலாவின் தென்துருவதில் கால்பதித்த முதல் நாடாக இந்தியா சாதனை!!

உலக அளவில் கவனத்தை ஈர்த்த சந்திராயன் 3 விண்கலம் சற்றுமுன் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் வெற்றிப்பயணத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன் தரையிறக்க காட்சியை இணையவழியில் நேரலையாக பார்த்துள்ளார். இதன்மூலம், விண்வெளி ஆராய்ச்சியில் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நிலவில் தரையிறக்கத்தை மேற்கொண்ட 4 ஆவது நாடாக இந்தியா பதிவாகியுள்ளது. இதன்மூலம், நிலவின் தென் துருவத்தில் கால் பதிக்கும் உலகின் முதல் நாடாக இந்தியா தன் சாதனையைப் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

உயர்த்தப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் முக்கிய அறிவித்தல்!!

2022 ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பா் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படுமென கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந் குமார் தெரிவித்துள்ளாா். இந்த ஆண்டு ஜனவரி 23 முதல் பெப்ரவரி 17 வரை நடைபெற்ற பரீட்சையில் 278196 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 53513 தனியார் விண்ணப்பதாரர்களும் என மொத்தம் 331,709 பேர் தோற்றினர். பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக 2022 உயர்தர பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வது தடைப்பட்டு மே மாதம் மதிப்பீட்டு Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

பஸ் இல் ஜன்னலுக்கு வெளியே தலையை வைத்த 16 வயது மாணவன்….. மின் கம்பத்துடன் சென்றது தலை!!

கல்வி சுற்றுலா சென்ற பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் மாணவர் ஒருவர் ஜன்னலுக்கு வெளியே தலையை வைத்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளார். ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருமஸ்ஸால மலையை நோக்கி செல்லும் வீதியில் நேற்று(20/08/2023) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேருந்தின் பின் இருக்கையில் பயணித்த மாணவன் ஜன்னலுக்கு வெளியே தலையை வைத்ததால் மின்கம்பத்தில் தலை மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்த மாணவர் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். Read More

Read More