சற்று முன் வெளியாகின AL பெறுபேறுகள்!!
கடந்த 2022/2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தரா தர உயர் தர பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் இணையத்தில் வெளியாகின. பெறுபேறுகளை பார்வையிட இங்கே சொடக்குங்கள்…….
கடந்த 2022/2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தரா தர உயர் தர பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் இணையத்தில் வெளியாகின. பெறுபேறுகளை பார்வையிட இங்கே சொடக்குங்கள்…….
சிவில் உடையில் இருந்த ஈச்சிலம்பற்று காவல்துறையினரால் வெருகல் முருகன் ஆலயத்திற்கு சென்று வீடு திரும்பிய மாணவர்கள் உள்ளாடை களையப்பட்டு சோதனையிடப்பட்டதுடன் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது என பிரபல உள்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று(02/09/2023) அன்று அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, வெருகல் பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற வெருகலம்பதியான் முருகன் ஆலயத்தில் வருடார்ந்த திருவிழா நடைபெற்று வருகின்ற நிலையில் மாவடிச்சேனை கிராமத்தைச் சேர்ந்த மாவடிச்சேனை பாடசாலையில் 09, 10, 11 ஆம் ஆண்டுகளில் Read More
இலங்கையின் உள்நாட்டு சந்தையில் மோட்டார் வாகனங்களின் விலைகள் மீண்டும் அதிகரித்து செல்வதாக வாகன விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை அரசாங்கம் அண்மையில் பொதுப் போக்குவரத்து மற்றும் சரக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. எனினும், சாதாரண மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் இன்னமும் வழங்கவில்லை. இந்த நிலையினால், நாட்டில் மீண்டும் வாகனங்களின் விலை அதிகரித்துச் செல்லும் போக்கினை அவதானிக்க முடிவதாக வாகன விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, உள்நாட்டில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் விலைகள் Read More
சிறுவர் இல்லத்தில் இருந்த 16 வயதுடைய சிறுமி காணாமல் போயுள்ளதாக குறித்த சிறுவர் இல்லத்தின் விடுதி பொறுப்பாளர் குளியாப்பிட்டிய காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். ஹலவத்த – கட்டுபொத்த எரோமா சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுமியே காணாமல் போயுள்ளார். மஹவ நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறுமி இந்த சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. வடமேற்கு மாகாணத்தில் இயங்கிவரும் சிறுவர் இல்லங்களின் சிறுவர்கள் பங்குபற்றிய விளையாட்டு நிகழ்வு நேற்று (02/09/2023) குளியாபிட்டிய ஷில்பா ஷாலிகா விளையாட்டரங்கில் Read More
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரொருவர் இன்று(03/09/2023) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். போலியான கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வெளிநாடு ஒன்றுக்கு செல்ல முற்பட்ட நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது. குறித்த இளைஞர் ஜோர்தானுக்கு செல்லும் வகையில் இன்று(03/09/2023) அதிகாலை 3.30 மணியளவில் எயார் அரேபியா விமான சேவை(Air Arebia Airlines) நிறுவனத்திற்கு சொந்தமான G9501 என்ற விமானத்தில் பயணம் செய்ய வந்ததிருந்தார். எனினும், இவர் சமர்ப்பித்த கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் போலியானவை என்பது Read More
வெலிகம, கும்பல்கம குருந்துவத்த பிரதேசத்தில் சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த சுற்றுலா பயணி ஒருவர் விடுதி உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கி அறைக்கு தீ வைத்துள்ளதாக வெலிகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று(02/09/2023) பிற்பகல் இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் ஆத்திரமடைந்த சுற்றுலா பயணி விடுதி உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார். 33 வயதான இந்த எகிப்திய சுற்றுலாப் பயணி சுமார் மூன்று வருடங்களாக இந்த சுற்றுலா விடுதியில் தங்கியிருந்ததாகவும் ஒரு மாத காலத்துக்கான சுற்றுலா விடுதிக்கு Read More
தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வரும் அர்ஜுன் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அர்ஜுன் – நிவேதிதா தம்பதியின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன். இவர் 2013- ஆம் ஆண்டு ‘பட்டத்து யானை‘ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் மற்றும் கன்னடத்தில் வெளியான ‘சொல்லிவிடவா‘ என்ற திரைப்படத்தில் நடித்தார். இப்போது அர்ஜுன் இயக்கத்தில் நடித்து வருகிறார். நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் நடிகர் தம்பி ராமையாவின் மகன் Read More
அமெரிக்காவின் புளோரிடா(Florida) மாநிலத்தில் நேற்று (30/08/2023) ஏற்பட்ட சூறாவளி காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சூறாவளியானது கியூபாவில் இருந்து மணிக்கு 215 கிலோ மீற்றர் வேகத்தில் புளோரிடா(Florida) மாநிலத்திற்குள் நுழைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், புளோரிடா(Florida) மாநிலத்தில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சூறாவளியின் போது பலத்த மழை பெய்ததுடன் கடற்கொந்தளிப்பும் ஏற்பட்டது. இதனால், புளோரிடா(Florida) நகரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. பல இடங்களில் Read More
உலகளாவிய முன்னணியான தொழில்நுட்ப நிறுவனமான அப்பிள்(Apple) தற்போது தனது இறுதி அப்டேட் ஆன ஐபோன் 15(iPhone 15) இன் வெளியீட்டு நிகழ்வை அறிவித்துள்ளது. அடுத்த தலைமுறை ஐபோன் 15(iPhone 15 Smartphone) கைத்தொலைபேசிகள் செப்டம்பர் 12 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இந்த நிகழ்வு இரவு 10:30 மணிக்கு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன்கள்(iPhone) இந்த ஆண்டு பல பகுதிகளில் பாரிய மேம்படுத்தல்களைப் பெற வாய்ப்புள்ள. இருப்பினும், வடிவமைப்பு பெரிதாக மாறாமல் இருக்கலாம். Read More
இலங்கையில் எரிபொருள் விலைக் கழிவுடன் சினோபெக் எனர்ஜி லங்கா(Sinopec) தனது விநியோக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நிறுவனம் கொழும்பு – மத்தேகொட பகுதியில் உள்ள அதன் முதல் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று(30/08/2023) தனது உத்தியோகபூர்வ எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்துள்ளது. அதன்படி, பெட்ரோல் மற்றும் டீசலுக்கு லீற்றருக்கு தலா 03 ரூபா விலைக் கழிவுடன் தமது விநியோகத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் எரிபொருள் சந்தையில் நுழைவதற்காக சீனாவின் சினோபெக்(Sinopec), அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம்(United Petrole Read More