அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை கடுமையாக தாக்கிய சூறாவளி!!

அமெரிக்காவின் புளோரிடா(Florida) மாநிலத்தில் நேற்று (30/08/2023) ஏற்பட்ட சூறாவளி காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சூறாவளியானது கியூபாவில் இருந்து மணிக்கு 215 கிலோ மீற்றர் வேகத்தில் புளோரிடா(Florida) மாநிலத்திற்குள் நுழைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில்,

புளோரிடா(Florida) மாநிலத்தில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சூறாவளியின் போது பலத்த மழை பெய்ததுடன் கடற்கொந்தளிப்பும் ஏற்பட்டது.

இதனால்,

புளோரிடா(Florida) நகரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது.

பல இடங்களில் குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இலட்சக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்துள்ளதனால் வீதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

புளோரிடாவில் மின் இணைப்புக்கள் முற்றிலும் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மின்சாரம் இல்லாததால் 5 இட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *