TOP STORIES

FEATUREDLatestNewsTOP STORIES

அரச துறையில் புதிய ஆட்சேர்ப்பு….. அமைச்சர் வெளியிட்ட தகவல்!!

அரச சேவையில் எதிர்காலத்தில் மிகவும் அத்தியாவசியமான துறைகளைத் தவிர வேறு எந்தவொரு அரச துறையிலும் புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறாது என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். தற்போதைய பொதுப்பணித்துறை அரசுக்கு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார் இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “15 இலட்சம் அரச ஊழியர்கள் உள்ளனர்.  நாட்டின் மக்கள் தொகை 21 மில்லியன் ஆகும். மக்கள் தொகையில் சுமார் 12 பேருக்கு ஒரு அரச ஊழியர் உள்ளார். இது உலகின் மிக Read More

Read More
EntertainmentFEATUREDindiaLatestNewsSportsTOP STORIESWorld

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த “டேவிட் வோர்னர்”!!

உலகக்கோப்பை தொடரின் இன்றைய (08) போட்டியில் இந்தியா – அவுஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றன. சென்னையில் தொடங்கிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா துடுப்பாட்டத்தை துவங்கியது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் உலகக்கோப்பை சாதனையை டேவிட் வார்னர் தகர்த்துள்ளார். மிட்செல் மார்ஷ் ரன் எடுக்காமல் வெளியேற, ஸ்டீவன் ஸ்மித் களமிறங்கி வார்னருடன் இணைந்து விளையாடினார். இந்தப் போட்டியில் டேவிட் வார்னர் 2வது பவுண்டரியை விரட்டியபோது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அவர் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

படகு மூலம் பிரித்தானியாவிற்கு சென்ற யாழ் இளைஞன் உயிரிழப்பு!!

பிரான்ஸில் இருந்து லண்டனுக்கு சட்டவிரோதமான முறையில் பயணித்த இலங்கையர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று நேற்று முன் தினம் (05) இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞரும் இன்னும் சில நபர்களும் இணைந்து லண்டனுக்கு சட்டவிரோதமாக படகில் பயணித்துக் கொண்டிருந்தபோது படகு புயலில் சிக்கி கடலில் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக கடலுக்குள் விழுந்த குறித்த நபரை படகில் இருந்த ஏனையவர்கள் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

கொழும்பின் ஏழு முக்கிய இடங்களுக்கு ISIS பயங்கரவாதத் தாக்குதல் திட்டம்….. விசாரணைகள் ஆரம்பம்!!

கொழும்பில் உள்ள ஏழு முக்கிய இடங்களில் குண்டுத் தாக்குதல் நடத்த ஐ.எஸ் ஐ எஸ் அமைப்பு திட்டமிட்டிருப்பதாக தென்னிலங்கை ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. நேற்று (05) கொழும்பு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்கவிடம் இது தொடர்பான தகவல்களை தெரிவித்துள்ளதாகவும் குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கொழும்பில் நாடாளுமன்றம், துறைமுகநகரம், கங்காராமய உள்ளிட்ட ஏழு இடங்களை குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகளின் குண்டுத் தாக்குதலை நடத்தும் திட்டம் தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு தகவல் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

தென்னிலங்கையில் ஒரே நாளில் நடந்த பாரிய பேருந்து விபத்துகள்!!

இலங்கையின் மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்றைய தினம் சுமார் நான்கு பேருந்து விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இதில் சிலர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கஜுகம விபத்து இந்த நிலையில், நீர்கொழும்பு – கொழும்பு பிரதான வீதியில் கஜுகம பகுதியில் பாரவூர்தியுடன் தனியார் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 22 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் வதுபிட்டிவல வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 4 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குளியாப்பிட்டிய Read More

Read More
EntertainmentFEATUREDindiaLatestNewsSportsTOP STORIESWorld

ஆசிய விளையாட்டு 2023 பெண்கள் கபடி போட்டி….. இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!!

பீஜிங்: 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இன்று நடைபெற்ற பெண்கள் கபடி போட்டி அரையிறுதியில் இந்திய அணி நேபாளத்தை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 61-17 என வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஈரான் அல்லது சீன தைபே அணியுடன் மோத உள்ளது.  

Read More
CINEMAEntertainmentFEATUREDLatestTOP STORIESTOP VIDEOSWorld

LEO ட்ரைலரை காண குவிந்த ரசிகர்கள்….. திரையரங்க சேர்களை சேதப்படுத்தி அட்டூழியம்!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது. Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

சிறைச்சாலைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்த கைதி!!

புத்தளம் நீதிமன்ற சிறைச்சாலைக் கூடத்தில் ஆணொருவர் துணியால் ஜன்னலில் கட்டி தூக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று(5) காலை 9.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக புத்தளம் காவல்துறையினர் தெரிவித்தனர். குறித்த நபர் நுரைச்சோலைப் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டில் கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இன்று(5) நீதிமன்றம் வழக்கிற்கு கொண்டுவரப்பட்டு புத்தளம் நீதிமன்ற சிறைச்சாலைக் கூடத்தில் அடைத்து வைக்கப்பட்ட பின்னர் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த நபர் கப்புஹேன கனேமுல்ல Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestTOP STORIESTOP VIDEOSWorld

வெளியாகியது லியோ டிரெய்லர்…………………!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தின் டிரெய்லர் சன் டிவி இந்த உத்தியோகபூர்வ யூடூப் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது இப்போது நீங்கள் அதனை கண்டுகளிக்கலாம்.    

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

Sri lankan Airlines தாமதம்….. இலங்கைக்கு ஏற்பட்ட பேரிழப்பு!!

சிறி லங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் அண்மைய தாமதத்தினால் 6 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக எட்டு விமானங்கள் தாமதமாக வந்தமையினால் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார். ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பு வழங்குவதற்கு தற்போதைக்கு சாத்தியமில்லை என அவர் மேலும் தெரிவித்தார். சிறி லங்கன் எயார்லைன்ஸின் உரிமைகளைப் Read More

Read More