யாழில் கிணற்றுக்குள் தவறி விழுந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!!
கிணற்றுக்குள் தவறி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் குளிக்கும் போது கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்ததாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. உயிரிழந்த நபரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.