கனடாவில் அதிக வெப்பம் ; பலர் உயிரிழப்பு!!

கனடாவில் அதிக வெப்பத்தினால் பலர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த வௌ்ளிக்கிழமை முதல், 140 இற்கும் அதிகமானோர் திடீர் மரணத்தை தழுவியதாக Vancouver நகர பொலிஸார் தெரிவித்தனர்.

வயது முதிர்ந்தவர்களே பெருமளவில் உயிரிழப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொடச்சியாக மூன்றாவது நாளாக நேற்று (29) 49.5 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

கனடாவில் 45 பாகை செல்சியஸ் வெப்பநிலை முன்னெப்போதும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்த வெப்பநிலை காரணமாக, வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு மக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *