முற்றிலும் இலவசம் – அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்

இந்தியாவில் தனது ஸ்டிரீமிங் சேவையை முற்றிலும் இலவசமாக வழங்குவதாக நெட்ப்ளிக்ஸ் அறிவித்து இருக்கிறது.

இந்தியாவில்  நெட்ப்ளிக்ஸ் சேவை டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இது விளம்பர நோக்கில், அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இலவச சலுகை ஸ்டிரீம்பெஸ்ட் எனும் பெயரில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் இந்த சலுகை டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் அமலாக இருக்கிறது. அதன்படி வாடிக்கையாளர்களுக்கு வார இறுதிநாட்களில் நெட்ப்ளிக்ஸ் சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
இதை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் பதிவு செய்யவோ, கட்டணம் செலுத்தவோ தேவையில்லை. விருப்பம் உள்ளவர்கள் டிசம்பர் 4 ஆம் தேதிக்கு பின் எப்போது வேண்டுமானாலும் 48 மணி நேரத்திற்கு நெட்ப்ளிக்ஸ் சேவையை இலவசமாக ஸ்டிரீம் செய்து பார்க்க முடியும்.
இந்த 48 மணி நேரத்திற்கு பயனர்கள் நெட்ப்ளிக்ஸ் சேவையில் பதிவு செய்யவோ, கட்டணம் செலுத்தவோ அவசியம் இல்லை. இதுவரை 30 நாட்களுக்கு இலவச சேவை வழங்கப்படுகிறது. எனினும், இதனை பயன்படுத்த பயனர் தங்களின் விவரங்களை வழங்க வேண்டும். ஸ்டிரீம்பெஸ்ட் சேவை நிறைவுறும் போது எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *