பிறந்த நாள் நிகழ்வில் கலந்துகொண்ட பொலிஸ் அதிகாரிக்கு கொரோனா

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

குறித்த பொலிஸ் அதிகாரி பிறந்த நாள் நிகழ்வொன்றில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகவரெட்டிய – தியகம பகுதியில் இடம்பெற்ற பிறந்த நாள் நிகழ்வில் குறித்த பொலிஸ் அதிகாரி கலந்து கொண்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்த பகுதியிலுள்ள 35 குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 150 பேர் வரை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *