மூன்றாகப் பிரிக்கபடவுள்ள ஓட்டோ சாரதிகள்….. எரிபொருள் அளவில் வரவுள்ளன விசேட சலுகை மாற்றங்கள்!!
தற்போது முழுநேர ஓட்டோ சாரதிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் அளவில் மாற்றங்களை செய்ய எதிர்பார்த்துள்ளதாக இலங்கைப் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் உவைஸ் மொஹமட் தெரிவிக்கையில்,
ஓட்டோ பயன்பாடுகளை முழுநேர, பகுதிநேர, தனிப்பட்டப் பாவனைக்குப் பயன்படுத்துவோர் என மூன்றாகப் பிரிக்க வேண்டும் என அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும்,
எரிபொருளுக்கான புதிய தேசிய அனுமதிப்பத்திரத்தின் ஊடாக வெறும் 30 விநாடிகளுக்குள் எரிபொருளை நிரப்பிக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.