அல்வாயில் பேத்தியாருடன் உறங்கிக்கொண்டிருந்த 4 வயது சிறுமியை வீடு புகுந்து கடத்த முயற்சி!!

பேத்தியாருடன் உறங்கிக்கொண்டிருந்த 4 வயது சிறுமியை நள்ளிரவு நேரம் வீடு புகுந்து நபர் ஒருவர் கடத்த முயற்சி மேற்கொண்டதாக பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அல்வாய் மேற்கு பகுதியில் உள்ள வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போதே 4 வயது சிறுமியை கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டின் முன்பக்கம் பேத்தியாருடன் சிறுமி உறங்கிக் கொண்டிருந்தார்.

சிறுமியும் சிறுமியின் சகோதரனும் அருகே உறங்கிக் கொண்டிருந்தார்கள்.

 

இந்நிலையில்,

நேற்று திங்கட்கிழமை(06/06/2022) நள்ளிரவு 12 மணி அளவில் சிறுமியை யாரோ ஒருவர் தூக்கி வைத்து இருப்பதை பேத்தியார் அவதானித்துள்ளார் .

அந்த நபர் முகமூடி அணிந்து இருப்பதை கண்டு அச்சத்தில் அவர் கூக்குரல் இட்டு கத்தியுள்ளார்.

 

இதனையடுத்து,

சிறுமியை விட்டுவிட்டு முகமூடி அணிந்த நபர் தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளார் என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *