பாலிவுட் நடிகை ஆலியா பட் – நடிகர் ரன்பீர் கபூர் திருமணம் நேற்று நடந்தேறியது!!

பாலிவுட் நடிகை ஆலியா பட்டும், நடிகர் ரன்பீர் கபூரும் நேற்று திருமணம் செய்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பாலிவுட் நடிகை ஆலியா பட்டும், நடிகர் ரன்பீர் கபூரும் நீண்ட நாட்கள் காதலித்து வந்த நிலையில் நேற்று பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர்.

இந்த புகைப்படத்தை ஆலியா பட் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

“ஆலியா பட்”  இன் Twitter பதிவை பார்வையிட இங்கே அழுத்துக.

அதில்,

‘நேற்று, எங்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் மத்தியில் எங்களுக்கு பிடித்த இடமான, எங்கள் உறவின் கடந்த 5 ஆண்டுகளாக நாங்கள் செலவழித்த பால்கனியில் – நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்’.

எங்கள் வாழ்க்கையில் இந்த மிக முக்கியமான நேரத்தில் நீங்கள் காட்டிய அனைத்து அன்புக்கும் நன்றி.

இது இந்த தருணத்தை மேலும் சிறப்பானதாக்கியுள்ளது’ என்று பதிவிட்டுள்ளார்.

இந்த திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *