கனடாவிலும் பாடசாலைகளில் சாதி ஒடுக்குமுறைகள்….. அகற்றபட வேண்டுமென பிரேரணை சமர்ப்பியதுள்ள இலங்கைத் தமிழ் பூர்வீக பெண்!!
கனடாவில் பாடசாலைகளில் இடம்பெற்று வரும் சாதி ஒடுக்குமுறைகள் அகற்றபட வேண்டுமென பாடசாலைசபை அறக்காப்பாளரும் இலங்கைத் தமிழ் பூர்வீகத்தைக் கொண்டவருமான யாழினி ராஜகுலசிங்கம்(Yaazhini Rajagulasingam) கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பிலான பிரேரணை ஒன்றை அவர் றொரன்டோ மாவட்ட பாடசாலை சபையில் சமர்ப்பித்துள்ளார்.
இந்த பிரேரணைக்கு பாடசாலை சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தென் ஆசிய நாடுகள் ஆபிரிக்க நாடுகள் போன்றவற்றினைச் சேர்ந்தவாகள்சாதி முறைமைகளை தீவிரமாக பின்பற்றுவதாகவும்
இந்த சமூகங்களில் சாதி ஒடுக்குமுறை தீவிரமாக காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொது கல்வி முறைமையில் இவ்வாறான சாதி ஒடுக்குமுறைகளை களைவதற்கு ஒன்றாரியோ மனித உரிமைகள் ஆணைக்குழு திட்டமொன்றை வகுக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது
தங்களது சாதிய அடையாளம் காரணமாக எதிர்நோக்க நேரிட்ட நெருக்கடிகள் குறித்து யாழினியிடம் பல மாணவர்கள் தனிப்பட்ட ரீதியில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு இடம்பெறக் கூடிய சாதி ஒடுக்குமுறைகளை களைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.