வவுனியா ஓமந்தை எ9 வீதியில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்டியில் இருந்து முல்லைத்தீவு நோக்கிபயணித்த பொலிரோ ரக வாகனம் ஏ9 வீதியின் ஓமந்தை மாணிக்கர் வளவுப்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது பார ஊர்தியில் மோதி கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியது. விபத்தின் போது குறித்த வாகனத்தில் பெண்கள் சிறுவர்கள் உட்பட 15ற்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். விபத்தினால் வாகனத்தில் இருந்த அனைவரும் வீதியில் தூக்கிவீசப்பட்ட நிலையில் சம்பவ Read More