தொடர்ந்தும் உயிரிழந்து ஒதுங்கும் கடலாமைகள்!!
எக்ஸ் பிறஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளான சம்பவத்தை அடுத்து கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்து கரை ஒதுங்குவது தொடர்கதையாகிவிட்டது.
குறிப்பாக கடல் ஆமைகளே பெருமளவில் உயிரிழந்து கரை ஒதுங்குகின்றன.
அந்த வகையில் களுத்துறை – வஸ்கடுவ சந்திக்கு அருகிலுள்ள கடற்கரையில் இன்று புதன்கிழமை காலை உயிரிழந்த கடலாமை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. 50 கிலோ கிராம் எடைகொண்ட இந்தக் கடலாமையை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கொண்டுசென்றுள்ளனர்.
இதேவேளை மொரட்டுவ – அங்குலான கடற்கரையில் டொல்பினை ஒத்த உயிரினம் ஒன்றின் உடற்பாகங்கள் நேற்று கரையொதுங்கியிருந்தன. இந்த உயிரினம் ஒரு பாலூட்டியாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக அத்திடிய வனஜீவராசி பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.