அமெரிக்காவின் Francis Scott Key Bridge மீது மோதிய கப்பலில்….. இலங்கைக்காக அனுப்பப்பட்ட 764 தொன் அபாயகரமான வெடி பொருட்கள்!!
அமெரிக்காவின் (America) மேரிலேண்ட் மாநிலத்தில் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்துடன் (Francis Scott Key Bridge) மோதி விபத்துக்குள்ளான கப்பலில் அபாயகரமான பொருட்கள் இருந்தததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி,
764 தொன் அபாயகரமான பொருட்கள் இலங்கை நோக்கி செல்லவிருந்த கப்பலில் இருந்ததாக அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.
இலங்கை (Sri Lanka) நோக்கிய 27 நாள் பயணத்தை ஆரம்பித்த சிங்கப்பூர் சரக்கு கப்பல் கடந்த 26 ஆம் திகதி அமெரிக்காவில் விபத்துக்குள்ளானது.
அமெரிக்காவின் பிரான்சிஸ் ஸ்காட் கீ(Francis Scott Key Bridge) பாலத்துடன் குறித்த கப்பல் மோதியதில் ஏற்பட்ட விபத்து காரணமாக குறித்த பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் நீரில் வீழ்ந்து மூழ்கின.
இதனால்,
பல சேதங்கள் ஏற்பட்டிருந்த நிலையில் காணாமல் போன ஆறு பேரில் இரண்டு பேரின் உடலங்கள் மீட்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், குறித்த கப்பலில் எரியக்கூடிய, அபாயகரமான பொருட்கள், வெடிபொருட்கள் மற்றும் லித்தியம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய 56 கொள்கலன்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன்,
இந்த கப்பலில் ஏனைய 4 ஆயிரத்து 644 கொள்கலன்களில் என்ன இருந்தது என்பது தொடர்பில் இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,
கப்பலில் இருந்த ஏனைய பொருட்கள் மற்றும் அதன் பாதிப்பு தொடர்பான ஆராய்ச்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.