ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேக நபர்….. படைப்பகலில் நடு வீதியில் வெட்டிக்கொலை!!
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நபரொருவர் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்குளிய பிரதேசத்தில் வைத்தே இவர் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை,
செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் அந்தப் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த படுகொலையை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.