மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிப்பு!!
சாரதி அனுமதிப்பத்திர விநியோகம் மற்றும் புதுப்பிப்பதற்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று(08/08/2022) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்பட,
இலகுரக வாகனங்களுக்கான புதிய மருத்துவ பரிசோதனைக் கட்டணம் 1500 ரூபாயாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
மற்றும்,
கனரக வாகனங்களுக்கு சிறுநீர் பரிசோதனை தவிர புதிய மருத்துவ பரிசோதனை கட்டணம் 1,500 ரூபாயாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மருத்துவ பரிசோதனைகளுக்காக பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் உபகரணங்களின் விலை அதிகரிப்பு காரணமாக இவ்வாறு கட்டண அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.