நாளை முதல் மின்வெட்டு -வெளிவந்தது அறிவிப்பு
நாளை திங்கட்கிழமை முதல் மின் வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி நாளை முதல் ஒரு மணிநேரம் முதல் இரண்டு மணிநேரம் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மின் வெட்டை அமுல்படுத்துவதற்கு நேர்ந்துள்ளதாகவும், அதற்கான அனுமதியை பெற்றுத் தருமாறும் இலங்கை மின்சார சபை, பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரியிருந்ததாக அவர் தெரிவித்தார்.
எனவே இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு, தாம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டிய காலப் பகுதி மற்றும் நேரத்தை இலங்கை மின்சார சபையே தீர்மானிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். மின்சார பாவனையாளர்கள், கடந்த ஓரிரு வருடங்களாக தமக்கான மின்சார கட்டணத்தை செலுத்த தவறியுள்ளமையே, மின் வெட்டை அமுல்படுத்த காரணம் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.