78 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா – பொலிஸ்மா அதிபர் தகவல்
இலங்கையில் இதுவரை பல்வேறு பொலிஸ் நிலையங்களை சேர்ந்த 78 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதேவேளை 300 இற்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தல் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் 1800 இற்கும் அதிகமானோர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.