7 நாள் பெண் குழந்தையை சுட்டுக்கொன்ற தந்தை!!
பிறந்து 7 நாட்களேயான பெண் குழந்தையை தந்தை சுட்டுக்கொன்ற சம்பவம் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது.
மேலும் தெரியவருகையில்,
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மியான்வாலி மாவட்டத்தில் வசித்து வரும் ஷாஜீப் என்பவருக்கு முதலில் பெண் குழந்தை பிறந்தது.
இதனையடுத்து,
சமீபத்தில் அவருக்கு 2ஆவது பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஆண் குழந்தையை எதிர்பார்த்திருந்த அவருக்கு மீண்டும் பெண் குழந்தையே பிறந்துள்ளது.
இதனால் அவர் ஆத்திரத்தில் இருந்துள்ளார் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில்,
பிறந்து 7 நாட்களேயான தனது பெண் குழந்தையை கொடூரமாக 5 முறை சுட்டுக் கொன்றுள்ளார்.