55000mt அடிகட்டு பசளை உரம் இலங்கைக்கு – அவை இலவசமாக விவசாயிகளுக்கு….. தேர்தல் நெருங்குகிறது என சாடையில் கிசுகிசுக்கள்!!

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் 55000 மெற்றிக் தொன் அடிகட்டு பசளை உரம் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

உலக உணவுத் திட்டத்துடன் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது உர இருப்பு கிடைத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில்,

எதிர்வரும் இரண்டு பயிர்ச்செய்கைக் காலங்களுக்குத் தேவையான அடிகட்டு பசளை உரங்கள் இந்தப் பருவத்திலிருந்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *