நாளைய மின் துண்டிப்பு விபரம் வெளியீடு

நாளையதினமும் (07) சுழற்சி முறையில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

“இதன்படி, E மற்றும் F ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் 5 மணித்தியாலங்கள் மின் துண்டிக்கப்படும்.

குறித்த வலயங்களில், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டரை மணித்தியாலங்கள் மின் துண்டிக்கப்படும்.

P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்கள் மின் துண்டிக்கப்படும்.

மேற்குறிப்பிட்ட 08 பிரிவுகளில் மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலம் மின் துண்டிக்கப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *