30 வயதுக்கும் மேற்பட்டோர் தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் COVID-19 பரவுவதற்கான அதிக ஆபத்து உள்ள கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்ட பொது மக்களுக்கு இன்று(27) முதல் தடுப்பூசி போட முடிவு செய்துள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சகம் நேற்று அறிவித்தது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அதிகாரிகளுக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சமீபத்திய வாரங்களில் COVID-19 நோயாளிகளின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரித்து வருகின்றது.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இருந்து பெரும்பான்மையானவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில், 466 நோயாளிகள் கண்டறியப்பட்டனர், அதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கொழும்பு மற்றும் கம்பஹாவில் உள்ளவர்கள்.
இதையடுத்தே பாதிக்கப்படும் ஆபத்துள்ள பகுதிகளில் தடுப்பூசி நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.