யாழ் மற்றும் கிளிநொச்சி இளம் பெண்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது!!
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி விசாவைப்(Duplicate visa) பயன்படுத்தி இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற நிலையிலேயே விமான நிலைய குடிவரவு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த பெண் 31 வயதுடையவர் எனவும் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெண் 26 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
விமானப் போக்குவரத்து அனுமதிக்காக அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்களில் சந்தேகம் அடைந்த
Qatar Airlines அதிகாரிகள் இருவரையும் விமான நிலைய குடிவரவு மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளிடம் அனுப்ப நடவடிக்கை எடுத்தனர்.
அங்கு நடத்தப்பட்ட விசாரணையில்,
அவர்களிடம் இருந்த இத்தாலிய விசாக்கள் போலியான தகவல்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டவை என்பது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட பெண்களிடம் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது.