கிணற்றில் வீழ்ந்த குடும்பப் பெண் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!!
வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் கிணற்றில் விழுந்த பெண் ஒருவர் அயலவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரியன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. சம்பவத்தில் யசிந்தா வயது 28 என்ற குடும்ப பெண்ணே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை வவுனியா குருமன்காடு பகுதியில் திடீர் என மயங்கி விழுந்த வயதான பெண் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவருக்கு முன்னெடுக்கப்பட்ட அன்ரியன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. உயிரிழந்த இருவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.