வலிமை எந்த நிலையில் இருக்கிறது??
வலிமை படம் என்ன நிலையில் உள்ளது, எந்தெந்த காட்சிகள் எடுக்கப்பட வேண்டும், போஸ்ட் புரொடக்ஷனின் நிலை என்ன என்பது குறித்த புதிய அப்டேட்ஸை அஜித்தின் மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார்.
ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் வலிமை படம் தயாராகி வருகிறது.
இதில் அஜித், ஹூமா குரோஷி முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
யுவன் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு தடைப்பட்ட படங்களில் வலிமையும் ஒன்று.
வலிமை படத்தில் ஒரு முக்கிய சண்டைக் காட்சி எடுக்கப்பட வேண்டியுள்ளது.
கதைப்படி வெளிநாட்டில் எடுக்கப்பட வேண்டிய சண்டைக்காட்சி அது. ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டு வெளிநாடு செல்வதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்பு, அந்த சண்டைக் காட்சியை எடுப்பது என முடிவு செய்துள்ளனர்.
ஒருவேளை வெளிநாடு செல்ல கட்டுப்பாடுகள், குறித்த காலத்திற்குள் தளர்த்தப்படவில்லையெனில் மாற்று ஏற்பாட்டிற்கும் தயாராக உள்ளது படக்குழு. இந்த சண்டைக்காட்சி தவிர்த்து சிறுசிறு பேட்ச் work மட்டுமே உள்ளது.
Post Production பொறுத்தவரை, இதுவரை எடுத்த காட்சிகளில் பெரும்பாலானவற்றிற்கு டப்பிங் பேசி முடிக்கப்பட்டதாக சுரேஷ் சந்திரா கூறியுள்ளார். பினிஷிங் டச் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
வலிமை படத்தை தீபாவளியை முன்னிட்டு நவம்பரில் வெளியிட திட்டமிட்டிருந்தனர்.
கொரேனா தொற்று பெருமளவு குறைந்திருக்கும் நிலையில், விரைவில் படப்பிடிப்புகள் அனுமதிக்கப்படும் சூழல் நிலவுகிறது. ஆகவே, வலிமை திட்டமிட்டபடி தீபாவளிக்கு வெளியாக வாய்ப்புள்ளது.