உக்ரைனை திணறடித்த 4500 ஏவுகணைகள் – ஒலிக்கும் ரஸ்ய கீதம்….. வெளியாகிய எச்சரிக்கை!!

போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை ரஸ்யா சுமார் 4500 ஏவுகணை தாக்குதலை நடத்தி உள்ளது.

உக்ரைன் மீதான போர் தாக்குதல் தொடங்கியதில் இருந்து இதுவரை 4500 ஏவுகணைகளை ரஸ்யா உக்ரைன் மீது ஏவி இருப்பதாக அந்த நாட்டின் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி 24ம் திகதி தொடங்கிய உக்ரைன் ரஸ்யா இடையிலான போர் தாக்குதல், எட்டு மாதங்களை கடந்தும் தீர்வு எதுவும் கிடைக்கப் பெறாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் உக்ரைனிய மக்களுடனான தனது வழக்கமான இரவு நேர காணொளி உரையில் வீழ்த்தப்பட்ட ஈரானிய ட்ரோன்களின் முன்பு நின்று பேசிய ஜெலென்ஸ்கி,

போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை ரஸ்யா சுமார் 4500 ஏவுகணை தாக்குதலை நடத்தி உள்ளது .

அத்துடன் 8000க்கும் அதிகமான விமான தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

 

கடந்த இரண்டு தினங்களில் மட்டும் 30 மேற்பட்ட ஆளில்லா விமானங்களை ரஸ்யா உக்ரைன் மீது ஏவி இருப்பதாக குற்றம்சாட்டியதுடன்,

நாங்கள் தொடர்ந்து போராடுகிறோம், இன்னும் அதிகமானவற்றை சுட்டு வீழ்த்துவோம் என தெரிவித்துள்ளார்.

உக்ரைனிய சக்தி நிலையங்கள் மீது ரஸ்யா நடத்தி வரும் பரந்த தாக்குதல் உக்ரைனியர்களின் நம்பிக்கைகளை சிதைக்காது,

அதைப்போல ஏவுகணை தாக்குதல்களும் உக்ரைனியர்களை உடைக்காது.

மேலும் நமது நிலத்தில் எதிர்களின் தேசிய கிதம் ஒலிப்பது, நமது வானில் ஏவுகணைகள் பறப்பதை விட ஆபத்தானது எனவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *