டுவிட்டரின் புதிய தலைமை அதிகாரியான இந்தியர்!!

சமூக வலைதளங்களில் முண்ணனியில் உள்ள அமெரிக்காவைச் சேர்ந்த, ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தின் இணை நிறுவுனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஜாக் டோர்சியின் (Jack Dorsey) பதவிகாலம் அடுத்த ஆண்டு முடிவடைகிறது.

இந்நிலையில்,

தன் தலைமை செயல் அதிகாரி பதவியை ஜாக் டோர்சி நேற்று ராஜினாமா செய்துள்ளார்.

தற்போது புதிய தலைமை அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால்(Barak Agarwal) நியமனம் செய்யப்பட்டுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இவர் மும்பை ஐ.ஐ.டி.யில் படித்தவர்.10 ஆண்டுகளாக டுவிட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

அவர் படிப்படியாக பதவி உயர்வு பெற்று தற்போது இந்நிலைக்கு உயர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தன்மேல் நம்பிக்கை வைத்து டுவிட்டரின் புதிய தலைமை செயல் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு நன்றி தெரிவித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நிறுவனத்தை மென்மேலும் உயர்த்த பாடுபடுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே,

கூகுள் (சுந்தர் பிச்சை )மற்றும் மைக்ரோசாப்ட் (சத்யா நாதெள்ளா) நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளாக இந்தியர்கள் பதவி வகித்து வரும் நிலையில் டுவிட்டரும் தமது நிறுவனத்திற்கு இந்தியரையே தேர்ந்தெடுத்துள்ளது உலகம் முழுவதும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

 

‘பராக் அகர்வால்’ இன் Twitter பதிவை இங்கே பார்வையிட,

 

‘ஜாக் டோர்சி’ இன் Twitter பதிவை இங்கே பார்வையிட,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *