ஸ்ரீலங்கா அரசுக்கெதிராக நாளை ஹர்த்தால்!!
ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தீவிரவாத தாக்குதல்களுடன் தொடர்புடைய சூழ்ச்சியாளர்கள் உட்பட அனைவரும் கைது செய்யப்படும் வரை நாடு மிகப்பெரிய ஆபத்தில் தான் இருந்துவரும் என்ற எச்சரிக்கையை தென்னிலங்கையின் பிரபல அருட்தந்தையான ரொஹான் சில்வா வெளியிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் பற்றிய ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பலவீனமான விசாரணைகளுக்கு எதிராக நாளைய தினம் கறுப்புக்கொடி ஹர்த்தாலை நடத்தப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்காவில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி நடந்த உயிர்த்த ஞாயிறு தின தீவிரவாத தாக்குதல்களுடன் தொடர்புயைடவர்களைக் கைதுசெய்யுமாறும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரியும், முறையான விசாரணையை நடத்தும்படியும் வலியுறுத்தி நாளைய தினம் கறுப்புக்கொடி ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படவுள்ளது.
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையின் அழைப்பின் பேரில் இதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டிருப்பதாகவும், நியமித்தபடி நாளைய தினம் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படும் என்று தென்னிலங்கையின் பிரபல மனித உர்மை செயற்பாட்டாளரான அருட்தந்தை ரொஹான் சில்வா கொழும்பில் இன்று நடந்த மாநாட்டில் தெரிவித்தார்.