திருப்பதி கோவில் ஊழியர்க்ள தன்னிடம் தகாத முறையில் நடந்தததாக….. பிரபல நடிகை வெளியிட்ட காணொளியால் பரபரப்பு!!
திருப்பதி கோவிலில் டிக்கெட் இல்லை எனக் கூறி தன்னிடம் தகாத முறையில் ஊழியர்கள் நடந்து கொண்டதாக நடிகை அர்ச்சனா கவுதம் வீடியோ வெளியிட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் ஹஸ்தினாபுர் தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டவரும் நடிகையுமான அர்ச்சனா கவுதம் கடந்த வாரம் வியாழக்கிழமை(01/09/2022) திருப்பதி சென்றுள்ளார்.
அங்கு செயல் அதிகாரி அலுவலகத்தில் தனது சிபாரிசு கடிதம் மூலம் டிக்கெட் பெற வந்த அவரிடம் அங்கிருந்த ஊழியர்கள் அநாகரிகமாக பேசியதாக கூறப்படுகிறது.
ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கி அதன் பிறகு வி.ஐ.பி. டிக்கெட் ரூ.500 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என அங்கு உள்ள ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால்,
அங்குள்ள ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் அங்கிருந்த ஊழியர்க்ள தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள அவர்,
இந்து மத ஸ்தலங்கள் கொள்ளை அடிக்கும் கூடாரமாக மாறிவிட்டது.
மதத்தின் பெயரால் பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்ளும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆந்திர மாநில அரசை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good. https://www.binance.info/sl/register?ref=PORL8W0Z