நடிகை “மும்தாஜ்” வீட்டில் வேலை செய்த சிறுமிகளுக்கு துன்புறுத்தல்…. போலீசார் அதிரடி நடவடிக்கை!!
தமிழ் சினிமாவில் மோனிஷா என் மோனலிசா என்ற திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மும்தாஜ்.
அதன்பின்னர்,
குஷி, ஸ்டார், ரோஜாக்கூட்டம், ராஜாதி ராஜா என பல திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு ரீ எண்ட்ரி கொடுத்து புகழ்பெற்றார்.
இந்நிலையில்,
நடிகை மும்தாஜ் சென்னை அண்ணாநகர் எச்.பிளாக் பகுதியில் உள்ள வீட்டில் சினிமா நடிகை மும்தாஜ் வசித்து வருகிறார்.
இவரின் வீட்டில்,
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முக்தீன் மற்றும் அவரது சகோதரி நடிகை மும்தாஜ் வீட்டில் கடந்த 6 வருடமாக வீட்டு வேலைகளை செய்து வந்துள்ளனர்.
இதனிடையே,
அதில் ஒரு சிறுமி நேற்று வீட்டில் இருந்து வெளியே வந்து, தாங்கள் சொந்த ஊருக்கு செல்ல உரிமையாளர் அனுமதிக்கவில்லை என செல்போன் மூலம் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
பின்னர்,
சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர்கள் தகவல் தெரிவித்த சிறுமியை மீட்டு அண்ணா நகர் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
அப்போது,
அவர்கள் வடமாநிலத்தை சேர்ந்த தாங்கள் இருவரும் நடிகை மும்தாஜ் வீட்டில் வீட்டு வேலை செய்து வருவதாகவும்,
மேலும் அங்கு வேலை செய்ய தங்களுக்கு பிடிக்கவில்லை என்றும்,
சொந்த ஊருக்கு தாங்கள் செல்ல வேண்டும் என்று கூறினால் அனுப்பி வைக்க மறுப்பதாகவும் தெரிவித்தனர்.
தொடர்ந்து,
நடிகை மும்தாஜ் வீட்டில் வேலை செய்து வந்த 2 வட மாநில சிறுமிகளையும் அண்ணாநகர் போலீசார் மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
மேலும்,
சிறுமிகள் மீது வேறு தொந்தரவு ஏதேனும் கொடுக்கப்பட்டதா என்பது குறித்த விசாரணையை காப்பத்தினர்கள் கேட்டு வருகின்றனர்.