இணையவழியில் மாணவர்களுக்கு மனதளவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – வைத்தியர் எச்சரிக்கை

இணையத்தின் மூலமான கல்வி நடவடிக்கையால் மாணவர்கள் இணைய விளையாட்டுகளில் அதிகளவில் ஈர்க்கப்படுகின்றார்கள் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கின்றனர். மேலும், பாடசாலை கல்வி முறை குறைவடைவதால் மாணவர்களிடையே மனநலப் பிரச்சினைகள் அதிகரிக்கின்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் குழந்தைகள் மற்றும் இளம்பருவ மனநல மருத்துவ நிபுணர் வைத்தியர் தர்சனி ஹெட்டியாராச்சி (Darshani Hettiarachchi) சுட்டிக்காட்டுகிறார். இதேவேளை, பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் போது, இணைய கல்வி முறையால் ஈர்க்கப்பட்ட மாணவர்கள் பாடசாலை கல்வியைத் தொடர தயங்கலாம். மேலும் சில மாணவர்கள் Read More

Read more

Online Video Game இற்கு அடிமையான சிறுவன் எடுத்த விபரீத முடிவு!!

15 வயது சிறுவன் ஒன்லைன் வீடியோ கேமுக்கு அடிமையானதால் அவனது பெற்றோர் சிறுவனிடமிருந்து மொபைல் போனை பறிமுதல் செய்ததால் விபரீத முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளான். மாத்தறை ரொட்டும்பா பகுதியில் வசிக்கும் பாடசாலை மாணவனே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளான். இப்பகுதியில் உள்ள பல சிறுவர்கள் ஒரு குறிப்பிட்ட ஒன்லைன் வீடியோ கேமுக்கு அடிமையாக இருப்பதாக கூறப்படுகிறது. தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஒன்லைன் வழியாக நடத்தப்படுகின்றன. இதன் காரணமாக சிறுவர்கள் மொபைல் Read More

Read more

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி அடுத்த மாத இறுதியில் வௌியாகும்!!

கடந்த 2020 உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளிகளை அடுத்த மாத இறுதிக்குள் வௌியிடவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக உப தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சந்தன உடவத்த குறிப்பிட்டுள்ளார். நிலவும் கொரோனா தொற்று நிலைமையிலும், குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை ஈடுபடுத்தி, வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். இம்முறை ஒரு இலட்சத்து 10 ஆயிரம் விண்ணப்பங்கள் பல்கலைக்கழக Read More

Read more

ஒன்லைன் கல்விக்கு ஏற்ற ‘ஸ்மார்ட் போன்’ இல்லை – தவறான முடிவெடுத்த மாணவன் – சோகத்தில் குடும்பம்!!

ஒன்லைன் மூலம் நடத்தப்படும் கல்விச் செயற்பாட்டில் பங்குபற்றுவதற்கு ஏற்ற ஸ்மார்ட் போன் இல்லாத காரணத்தால் வாரியபொல பகுதியில் உள்ள 10 ஆம் வகுப்பு மாணவன் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வாரியபொல காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. வாரியபொல புறநகரில் உள்ள ஒரு பாடசாலையில் கல்வி கற்கும் கவிந்து தில்ஹான் கேஷரா விஜேரத்ன என்ற 10 ஆம் வகுப்பு மாணவனே கடந்த (16) ஆம் திகதி தனது அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக வாரியபொல Read More

Read more

கல்வி அமைச்சருடனான பேச்சு தோல்வி – ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிவிப்பு!!

கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸுடன் இன்று காலை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துவிட்டதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்தார். எனவே, தற்போது நடைபெற்று வரும் ஒன்லைன் மூலமான கல்விச் செயற்பாட்டை தொடர்ந்தும் புறககணிக்கவுள்ளதாக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் நாளை (22) கொழும்பில் பாரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாடுகள் தொடர்பான தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காண திங்கள்கிழமை (26) அமைச்சரவையில் ஒரு திட்டத்தை சமர்ப்பிப்பதாக Read More

Read more

இணைய வழி கற்பித்தல்- ஆசிரியர் சங்கங்கள் இன்று முதல் எடுத்துள்ள தீர்மானம்!!

இணைய வழி மூலமான கற்பித்தலில் இருந்து இன்று முதல் விலகிக்கொள்வதாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை ஆசிரியர் தொழிற்சங்கங்களினால் தீர்மானிக்கப்பட்டுள்ள இணைய வழி ஊடான கற்பித்தல் புறக்கணிப்புக்கு அனைத்து கத்தோலிக்க தனியார் பாடசாலைகளின் ஆசிரியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். தங்களது பிரதிநிதிகள் மனிதாபிமானற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். இந்தத் தொழிற்சங்க போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவைச் Read More

Read more

இணையக் கல்வி சம அளவில் கிடைக்கவில்லை – இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு!!

அனைத்து மாணவர்களுக்கும் இணையக் கல்வி சம அளவில் கிடைக்காமையால், பாடசாலை மாணவர்களின் உரிமை மீறப்படுவதாக தெரிவித்து இலங்கை ஆசிரியர் சங்கம், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு செய்துள்ளது. மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட கிளை அலுவலகத்தில் இன்று இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா, கிழக்கு மாகாண கல்வி செயலாளர் கிறிஸ்டி பெர்ணாந்து, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் M.T.A. நிசாம் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் Read More

Read more

ஜூம் சேவைக்கு போட்டியாக அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட் நிறுவனம் ஜூம் சேவையுடனான போட்டியை எதிர்கொள்ள அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. மைக்ரோசாப்ட் டீம்ஸ் சேவையில் நாள் முழுக்க இலவச வீடியோ மற்றும் வாய்ஸ் கால் வசதியை வழங்கப்படுகிறது. இந்த அறிவிப்பு ஜூம் சேவையுடனான போட்டியை எதிர்கொள்ளும் வகையில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. புதிய அறிவிப்பின் படி மைக்ரோசாப்ட் டீம்ஸ் இலவச சேவையில் அதிகபட்சம் 300 பேர் வரை கலந்து கொண்டு சுமார் 24 மணி நேரத்திற்கு உரையாட முடியும். சமீபத்தில் Thanksgiving தினத்தை முன்னிட்டு Read More

Read more