மண்டான் – குஞ்சர்கடை வீதியில் மோ.சைக்கிள் விபத்து….. ஒருவர் மரணம் – ஆபத்தான நிலையில் 17 வயது மாணவன்!!

வடமராட்சி குஞ்சர்கடைப் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 17 வயதுடைய மாணவன் மரணமடைந்துள்ள நிலையில் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் சற்று முன்னர் வடமராட்சி குஞ்சர்கடைப் பகுதியில் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் மண்டான், கரணவாய் மேற்கு, பகுதியைச் சேர்ந்த செல்வமோகன் வாணிஜன் (வயது 17) என்பவரே மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது. மேலு‌ம், இவருடன் பயணித்த சிவகுமார் கலையொளி (வயது 17)  என்பவருக்கும் ஒரு கால் முடிவடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக Read More

Read more

தனக்கு தானே தீ வைத்த கர்ப்பிணி பெண்….. வடமராட்சி மண்டானில் சம்பவம்!!

வடமராடசியில் உள்ள மண்டன் என்னும் பகுதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், தீவுப்பகுதியை சேர்ந்த குறித்த பெண்  மண்டான் பகுதியில்  அமைந்துள்ள தனது கணவரின் வீட்டிற்கு வருகைதந்து அங்கே ஏற்படட பிரச்னை காரணமாக, காலை 11.00 மணியளவில் வீட்டில் இருந்த மண்ணெய்யை தன்மேல் ஊற்றி வயிற்றில் கருவுடன் இருந்த அவர் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Read more

யாழில் மக்களால் உருவாக்கப்பட்ட சவுக்கம் காட்டை கையகப்படுத்த முயன்ற வனவளத் திணைக்களம்!!

யாழ்ப்பாணம் மணல்காடு சவுக்கமர காட்டினை ஸ்ரீலங்கா வனவளத் திணைக்களம் தமது ஆளுகைக்குட்படுத்தி எல்லைக் கற்களை நடுவதற்கு முயற்சித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. எனினும் மக்களின் எதிர்பை தொடர்ந்து வன வள திணைக்கள அதிகாரிகள் அங்கிருந்து சென்றுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், சவுக்கம் காடு 1963 ம் ஆண்டுக்குப் பின்னர் 1980 மற்றும் 1993 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால், மற்றும் மக்கள் அமைப்புக்காளால் நாட்டி வளர்க்கப்படது. குறித்த சவுக்கம் காட்டுப்பகுதியில் பொழுது Read More

Read more