#Trinco

LatestNewsTOP STORIES

பரீட்சை எழுதிவிட்டு நீரில் மூழ்கி இறந்த பத்து வயது சிறுமி!!

புலமைப்பரிசில் பரீட்சை எழுதிவிட்டு கடலில் நீராட சென்ற சிறுமியொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் மற்றுமொரு சிறுமி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று மாலை திருகோணமலை இறக்கக்கண்டி பாலத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. பாசல்மாவத்த -ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஸானி ஹன்சலா (10 வயது) என்ற சிறுமி உயிரிழந்துள்ளதுடன் நீரில் மூழ்கிய சிறுமி கன்னியா வீதி- மிகிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த அயோத்யா (10 வயது) எனவும் தெரியவருகின்றது. நேற்றையதினம் புலமைப்பரிசில் பரீட்சை எழுதிவிட்டு Read More

Read More
LatestNewsTOP STORIES

பயணிகள் பேரூந்து – டிப்பர் மோதல்….. 26 பேர் படுகாயத்துடன் வைத்தியசாலையில் (படங்கள்)!!

திருகோணமலை – மூதூர், பட்டித்திடல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர். அம்பாறையில் இருந்து திருகோணமலைக்கு பயணித்த பயணிகள் பேரூந்தும் டிப்பர் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளான போதே இந்த 26 பேரும் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில், வாகனங்கள் இரண்டினதும் சாரதிகளும் அடங்குகின்றனர். இந்நிலையில், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  

Read More
LatestNews

திருகோணாலையில் கோரவிபத்து….. ஸ்தலத்திலேயே ஒரு உயிர் பலி!!

திருகோணமலையில் பிரதான வீதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளது. திருகோணமலையில் இருந்து சீமெந்து ஏற்றிச் சென்ற கனரக வாகனமும் ,திருகோணமலையை நோக்கி மண்கலந்த சிறிய கல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் சீமெந்து ஏற்றிச் சென்ற வாகன சாரதியே இவ்வாறு ஸ்தளத்தில் உயிரிழந்துள்ளார். டிப்பர் வாகன சாரதி படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். Read More

Read More
LatestNews

பாரிய பஸ் விபத்து திருகோணமலை கப்பல்துறை பகுதியில்!!

திருகோணமலையில் ஆடைத்தொழிற்சாலைக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், திருகோணமலை சீனக்குடா காவல்துறை பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை பிரதான வீதியில் தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கோமரங்கடவெல பகுதியில் இருந்து கப்பல் துறை பகுதியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் Read More

Read More
LatestNews

மாடு மேய்க்கச் சென்றவர் குளவி கொட்டி மரணம்!!

திருகோணமலை – தென்னமரவாடி பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் தென்னமரவாடி பகுதியைச் சேர்ந்த கனகசபை குகநாதன் (69வயது) எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வீட்டிலிருந்து மாடு மேய்க்கச் சென்ற போது மரத்திலிருந்து குளவி கூடு கலைந்து குறித்த நபரை குத்தியதாகவும் இதனை அடுத்து புல்மோட்டை தள வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த நபரின் சடலம் தற்போது புல்மோட்டை தள Read More

Read More
LatestNews

திருகோணமலைலையில் 147 சிறுவர்கள், 148 கர்ப்பிணித் தாய்மார்கள் பாதிப்பு!!

திருகோணமலை மாவட்டத்தில் 147 சிறுவர்களும் 148 கர்ப்பிணித்தாய்மார்களும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது. திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தினால்  (31) வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட நாளாந்த உத்தியோகபூர்வ அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரை 4,631 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 99 பேர் மரணித்துள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது. இதுவரைக்கும் 9,815 பேர் தொற்றுக்கு Read More

Read More
LatestNews

நேற்று மாலை இடம்பெற்ற கோரவிபத்து – சம்பவ இடத்தில் பறிபோன இளம் குடும்பஸ்தரின் உயிர்!!

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் நாவலடிச் சந்தியில் மோட்டார் சைக்கிளும் – பட்டா ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து நேற்று (27) மாலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் மூதூர்-சம்பூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சிவராசா நவநீதன் வயது (28) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த நபரின் சடலம் தற்போது சம்பூர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பட்டா வாகனத்தைச் செலுத்திச் சென்ற Read More

Read More
LatestNews

கரடியின் தாக்குதலுக்குள்ளானவர் வைத்தியசாலையில் அனுமதி!!

திருகோணமலை – திரியாய் பகுதியில் வயல்காவலுக்குச் சென்ற நபரொருவர் கரடியின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று (13) காலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. திரியாய் – கட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கே. பிரபாகரன் (48 வயது) என்பவரே இவ்வாறு கரடியின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, திரியாய் பகுதியில் உள்ள வயல் காவலுக்குச் சென்று உறங்கிக் கொண்டிருந்த போது கரடி பாய்ந்து கடித்ததாகவும் இதனையடுத்து காலில் காயம் ஏற்பட்ட Read More

Read More
LatestNews

திருகோணமலையில் கடலுக்கு சென்ற மூன்று மீனவர்கள் மாயம்!!

திருகோணமலையில் கடலுக்கு சென்ற நிலையில் மூன்று மீனவர்கள் காணாமற் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திருகோணமலை – திருக்கடலூர் பகுதியில், நேற்று முன்தினம் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட கடலுக்கு சென்ற மீனவர்கள் மூவரே கரை திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 21 வயதான விஜேந்திரன் சஞ்சீவன், சிவசுப்ரமணியம் நதுர்சன்,மற்றும் 34 வயதான ஜீவரெட்ணம் சரண்ராஜ் ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். இதேவேளை, வானிலை நிலவரம் குறித்த தகவல்கள் தமக்கு கிடைக்காமையாலும், கொவிட் அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள வறுமை காரணமாகவுமே குறித்த மீனவர்கள் கடலுக்கு Read More

Read More
LatestNews

நேருக்கு நேர் மோதிக்கொண்ட வாகனங்கள்- ஆபத்தான நிலையில் நபர்!

திருகோணமலை மவட்டத்தின் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமேந்து ஏற்றிச் சென்ற வாகனமொன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் இன்று காலை 6.00 மணியளவில் அக்போபுர 87 ஆம் கட்டை சந்தியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதில் 36 வயதுடைய ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹபரனையிலிருந்து கந்தளாய் பகுதிக்கு Read More

Read More