மற்றுமோர் சாதனை படைத்தது யாழ். போதனா வைத்தியசாலை!!
வடமாகாணத்தில் முதல்முறையாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அண்மையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. விபத்தினால் மூளைச்சாவடைந்து உயிரிழந்த இணுவிலைச் சேர்ந்த தங்கராசா பிரிஞ்சன் என்கிற இளைஞர் ஒருவரின் இரண்டு சிறுநீரகங்கள், இரண்டு சிறுநீரகமும் செயலிழந்த நோயாளிகளுக்கு மாற்றப்பட்டது. சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் உயிர் வாழ்ந்த இருவருக்கும் சிறுநீரகங்கள் வெற்றிகரமாக சத்திரசிகிச்சை நிபுணர்கள், உணர்வழியியல் நிபுணர்கள், சிறுநீரக நிபுணர்கள் மூலம் மாற்றப்பட்டது. கண்டியிலிருந்து சத்திரசிகிச்சை நிபுணரொருவர் அழைத்து வரப்பட்டு உதவிகளும் பெறப்பட்டது. அதிகரித்த Read More
Read More