கதவுகள் பூட்டப்பட்ட புகையிரதத்தில் சமையல் பிரிவில் எரிவாயு விபத்து….. பேர் உடல்கருகி பலி!!

இந்தியாவின் மதுரை புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த IRCDC சுற்றுலா புகையிரதத்தில் சமையல் பிரிவில் எரிவாயு வெடித்து தீப்பற்றியுள்ளது. இன்று(26/08/2023) அதிகாலை 5.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு தீயணைப்பு படையினர் விரைவில் வந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். புகையிரத பெட்டியில் 60 பேர் இருந்ததாகவும் கதவுகள் பூட்டப்பட்டிருந்ததால் யாரும் வெளியே செல்ல முடியாமல் தீயில் சிக்கியதாகவும் குறிப்பிடப்படுகிறது. அத்துடன், குறித்த விபத்தில் 10 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. .

Read more

தொடருந்து கட்டணங்கள் உயர்வு…… இரு மடங்கானது குறைந்தபட்ச கட்டணம்!!

நாளை( 22/07/2022) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தொடருந்து கட்டணங்கள் உயர்த்தப்படும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக தொடருந்து பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதன்படி, 10 ரூபாவாக இருந்த 3 ஆம் வகுப்புக்கான குறைந்தபட்ச பயணக் கட்டணம் 20 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. தொடருந்து கட்டணங்கள் மற்றும் பிற தொடருந்து கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கு கடந்த மாதம் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. எரிபொருள் விலையேற்றம் காரணமாக Read More

Read more