யாழ் போதனா மருத்துவமனையில் நீண்ட காலமாக திருடி வந்தவர் கைது!!

யாழ்பபாணம் போதனா மருத்துவமனையில் நீண்ட காலமாக தொலைபேசிகளைத் திருடி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து பெறுமதிவாய்ந்த 9 அலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று காவல்துறையினர் தெரிவித்தனர். மானிப்பாய் சாவற்கட்டுப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நீண்ட நாள்களாக ஊழியர்கள், நோயாளிகளின் தொலைபேசிகள் திருட்டுப்போயிருந்தன. கதைத்துவிட்டுத் தருவதாக தெரிவித்துவிட்டு அபகரித்துச் செல்வது, நோயாளிகள் மலசல கூடங்களுக்கு செல்லும் போது என தொலைபேசிகள் திருடப்பட்ட சம்பவம் இடம்பெற்றன. Read More

Read more