FEATUREDLatestNewsTOP STORIES

மீண்டும் இறக்குமதி தடை நீடிப்பு!!

இலங்கையில் இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ள சில பொருட்களுக்கான இறக்குமதி தடை  நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அழகுசாதன பொருட்கள், வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் ஏற்றுமதி நோக்கிலான ஆடை உற்பத்தி மூலப் பொருட்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கப்படவுள்ளது.

இந்த தடை எதிர்வரும் இரண்டு வாரங்களில் நீக்கப்பட உள்ளது.

குறித்த துறைகளின் பணியாளர்களினால் தொடர்ந்து முன்வைக்கப்படும் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி திணைக்களத்தின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த தடை நீக்கப்படவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

One thought on “மீண்டும் இறக்குமதி தடை நீடிப்பு!!

  • Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *