#Srilanka

LatestNews

காலி கடற்பரப்பில் பெருமளவான ஆயுதங்கள்!!!!

காலி கடற்பரப்பில் பெருமளவு ஆயுதங்கள் வீழ்ந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. காலி கடலில் தரித்து நின்ற கப்பல் ஒன்றில் ஆயுதங்களை ஏற்றிக்கொண்டிருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றதாக கடற்படை பேச்சாளர் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார். செங்கடல் பகுதிக்கு செல்லவிருந்த கப்பலில் ஆயுதங்களை இலங்கை கடற்படையினர் ஏற்றிக்கொண்டிருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கடற்படையினரை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. படகொன்றிலிருந்து கப்பலிற்குள் ஆயுதங்களை ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை ஆயுதங்களை ஏற்ற பயன்படுத்தப்பட்ட வலை அறுந்துவிழுந்தது என கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். Read More

Read More
LatestNews

பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் சாத்தியம் – அஜித் ரோஹண தகவல்!!

எதிர்வரும் 7 ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்  பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இன்று காலை தென்னிலங்கை சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். அத்துடன் அடுத்த சில நாட்களில் மக்கள் செயற்படும் விதம், பயணக் கட்டுப்பாட்டை தளர்த்துவதற்கு முக்கிய காரணமாக அமையும் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Read More
LatestNews

கொழும்பு கடலில் தீப்பற்றி எரிந்த கப்பலால் ஏற்பட்டுள்ள ஆபத்து – மக்களுக்கு முக்கிய அறிவித்தல் !!

எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ல் என்ற கப்பலில் ஏற்பட்டுள்ள தீ பரவல் காரணமாக மீன்வளத்துறைக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக சாத்தியம் காணப்படுவதாக தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் நவரத்னராஜா தெரிவித்துள்ளார். தீவிபத்திற்குள்ளாகியுள்ள குறித்த கப்பல் வெடித்து சிதறும் அபாயத்தில் உள்ளமை தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் பேசிய அவர், கொழும்பு துறைமுகத்தின் வட மேல் திசையில் 9.5 கடற்பரப்பில் தீப்பற்றி எரியும் கப்பலின் கழிவுகள் மற்றும் வெடித்து Read More

Read More
LatestNews

மீண்டும் பொது மக்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்கத் திட்டம்! அமைச்சர் தகவல்!!!!

மீண்டும் ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்கு தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, நிரந்தர வருமானம் இன்றி நாளாந்த வருமானத்தை பெறும் மக்களுக்கு இந்த கொடுப்பனவு மீண்டும் வழங்கப்படவுள்ளது. கொவிட் பரவலின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு நாடு முழுவதும் பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமையினால் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. இம்முறை இந்த Read More

Read More
LatestNews

அத்தியாவசியத் சேவைகள் தொடர்பில் வெளிவந்தது விசேட வர்த்தமானி!!

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய துறைமுகம், பெற்றோலியம், பொதுப்போக்குவரத்து, அரசவங்கிகள், கிராமசேவகர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்களின் சேவைகள் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Read More
LatestNews

மக்களின் பொறுப்பற்ற செயல்! அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!!

இன்றைய சூழ்நிலையில், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சட்டதிட்டங்கள் விதிக்கப்பட்டாலும் அதை சரியாக பொது மக்கள் பின்பற்ற தயார் இல்லையென்றால் கொவிட் வைரஸ் தாக்கத்தை ஒழிக்க முடியாது என சக்தி வலு அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். கொஸ்கம வைத்தியசாலையில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், 3 நாட்கள் அத்தியாவசிய பொருள் கொள்வனவுக்காக பயணக்கட்டுபாடுகள் தளர்த்தப்படும் என தெரிந்தும் பல நாட்கள் வீட்டுக்குள் அடைப்பட்டிருந்ததைப் போன்று மக்கள் நேற்று வீதிக்கு Read More

Read More
LatestNews

வெளிநாட்டிலிருந்து இலங்கை வர காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி !!!!

வெளிநாட்டு பயணிகள் இலங்கை வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் நீக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. எனினும், கடந்த 14 நாட்களுக்குள் இலங்கையிலிருந்து இந்தியா சென்றவர்கள் மீண்டும் நாடு திரும்ப தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானசேவைகள் அதிகார சபைத் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்தார். அவ்வாறே, இலங்கை வரும் விமானமொன்றில் 75 பயணிகள் மாத்திரமே இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக சிவில் விமான சேவைகள் Read More

Read More
LatestNews

இலங்கைக்கு அருகில் “யாஸ் சூறாவளி” மையம்! மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

இலங்கைக்கு அருகில் வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள யாஸ் சூறாவளி மேலும் தீவிரமடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. யாஸ் சூறாவளியானது எதிர்வரும் 26ஆம் திகதி வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இந்தியாவின் மேற்கு வங்காள கரையை கடக்கும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே மறு அறிவித்தல் வரை நாட்டை சூழவுள்ள ஆழமான மற்றும் வங்காள விரிகுடாவின் கடற்பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்வதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.

Read More
LatestNews

உலகம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது: உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை!!

தடுப்பூசி விநியோகத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கும் வரை கொரோனா வைரஸ் தொற்று தொடரும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். வருடாந்திர கூட்டத்தில் உரையாற்றிய அதன் தலைவர் டொக்டர் அன்டோனியோ குட்டரஸ், உலகளாவிய தடுப்பூசி விநியோகத்தில் 75% வெறும் 10 நாடுகளுக்கு மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளதாக கூறினார். சிறிய குழுவாக செயல்படும் குறிபிட்ட சில நாடுகள், உலகின் பெரும்பான்மையான தடுப்பூசிகளை தயாரித்து வாங்குகிறது. இந்த நாடுகள் உலகின் பிற நாடுகளின் தலைவிதியைக் கட்டுப்படுத்துகிறது என்று அவர் கூறினார். எந்த Read More

Read More
LatestNews

ஓய்வுபெறும் சட்டமா அதிபர் – ஜனாதிபதியும் பிரதமரையும் சந்தித்து முக்கிய பேச்சு!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரை ஓய்வுபெறும் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தனித்தனியே சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியை நேற்று அவர் சந்தித்து முக்கிய பேச்சு நடத்தினார். தப்புல டி லிவேராவின் சேவையைப் பாராட்டிய ஜனாதிபதி, அவரது ஓய்வு வாழ்க்கைக்காக வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இதேவேளை, அலரி மாளிகையில் பிரதமரையும் ஓய்வுபெறும் சட்டமா அதிபர் நேற்று சந்தித்தார். தப்புல டி லிவேரா, இலங்கையின் 47ஆவது சட்டமா அதிபர் ஆவார். பதில் Read More

Read More